கொரோனாவுக்கு சிவசேனா முன்னாள் எம்எல்ஏ பலி: சிகிச்சை பலனின்றி மரணம்

Must read

மும்பை: கொரோனாவுக்கு சிவசேனா கட்சி முன்னாள் எம்எல்ஏ சுரேஷ் கோர் பலியாகி உள்ளார்.

மகாராஷ்டிர மாநில கேட் சட்டசபை முன்னாள் எம்எல்ஏ சுரேஷ் கோர். 2014ம் ஆண்டு முதல் 2019 வரை சிவசேனா கட்சியின் எம்எல்ஏவாக இருந்தார். கடந்த மாதம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் கோர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார்.அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More articles

Latest article