தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Must read

தஞ்சை:
ஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில். அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் தஞ்சையில் தேர்பவனி விபத்து நடந்த களிமேடு பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு செல்கிறார்.

More articles

Latest article