சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வலியும் வேதனையும் போராடாதவர்களுக்குப் புரியாது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

1919 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ம் நாள் ஜெனரல் டயர் என்பவரால் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜாலியன்வாலாபாக் வளாகத்தை மறுசீரமைக்கும் பணி நடந்தது.

நூற்றுக்கணக்கானோர் ரத்தம் சிந்திய இந்த பூமியை ஒரு புண்ணிய ஸ்தலமாகவே மக்கள் போற்றி வருகின்றனர். மறுசீரமைப்பிற்க்காக மூடப்பட்ட இந்த வளாகத்தை பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்க வேண்டும் என்று உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர்.

புதிதாக சீரமைக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் வளாகத்தை பொதுமக்கள் பார்வைக்காக கடந்த ஞாயிறன்று பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சீரமைப்பு என்ற பெயரில், வரலாற்றை திரித்துக் கூற பாஜக அரசு முற்பட்டிருப்பதாகவும், இங்குள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு மாறுதல்களைச் செய்து சுதந்திரப் போரில் உயிர்நீத்தவர்களின் சான்றுகள் அழிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வலியும் வேதனையும் இவர்களுக்குப் புரியாது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

சுதந்திரத்திற்காக போராடியவர்களின் உழைப்பும் மனஉறுதியையும் அறியாதவர்கள் அந்த தலைவர்களின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கின்றனர்.