டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில்,  3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த 17ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கார், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய கொலீஜியம்  மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்தது. இதை மத்தியஅரசு ஏற்று, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. குடியரசு தலைவரும், கொலிஜியம் பரிந்துரையை அனுமதித்து உத்தரவிட்டார்.

அதன்படி,

  1. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா,
  2. குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத்,
  3. சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி,
  4. தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி,
  5. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா,
  6. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நீதிபதி சி.டி.ரவிக்குமார்,
  7. மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்,
  8. குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம். திரிவேதி
  9. மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா

ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவி ஏற்க உள்ளனர்.

உச்சநீதிமன்றத்துக்கு  ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறை என்றும் ஒரே நாளில் 9 நீதிபதிகள் இன்று பதவி ஏற்பதும் உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறை என்றும் கூறப்படுகிறது.