டில்லி:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் தாக்கல் செய்த அவசர  வழக்கு வரும் (28ந்தேதி) திங்கட்கிழமை விசாரணை எடுத்துக்கொள்வதாக உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

தூத்துக்குடியில்,ஸ்டெர்லைட் எதிர்த்து  அமைதி வழியில் போராடிய  மக்கள்மீது போலீசார் அத்துமீறி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகி உள்ளனர். 50க்கு மேற்பட்டோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் உச்சநீதி மன்றத்தில்  நேற்று வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்கா விசாரிக்க கோரியிருந்தார்.

இந்த நிலையில் உச்சநீதி மன்றம்,  இந்த வழக்கை இன்று விசாரிக்க முடியாது என்றும், வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்து உள்ளது.