திருமண அழைப்பிதழுக்குள் மினி எல்.சி.டி திரை: பாஜக பிரமுகரின் ஆடம்பரம்

Must read

திறந்தவுடன் ஹேப்பி பெர்த்டே பாடல் பாடும் வாழ்த்து அட்டைகளை பார்த்திருப்பீர்கள். கர்நாடக கோடீஸ்வரரும், முன்னாள் பா.ஜ.க அமைச்சருமான காலி ஜனார்த்தன் ரெட்டியின் மகளுடைய திர்மண அழைப்பிதழை திறந்தால் இரு மினி சினிமாவே ஓடுகிறது. வாழ்த்து அட்டைக்குள் ஒரு எல்.சி.டி திரையை பொருத்தி அதற்கான காணொளியை பாலிவுட் பட பாடல்காட்சி போல படமாக்கி ஜமாய்த்திருக்கிறார்கள்.

invit1

முன்னாள் பாஜக அமைச்சரான காலி ஜனார்த்தன் ரெட்டி மெகா நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சுமார் 40 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கையில் வரும் பாடல்காட்சியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடவுளை வணங்குவது போலவும், மணமகனும் மண மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது போலவும் அழகாக காட்சிகள் அமைக்கப்பட்டு இறுதியில் அனைவரும் இணைந்து திருமணத்துக்கு விருந்தினரை அழைக்கும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது.
https://youtu.be/0IRs3s-w3ac
திருமணம் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. கடந்தமாதம் நடந்த நிச்சயதார்த்தமே வெகு ஆடம்பரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் திருமணத்தை கேட்கவா வேண்டும்! பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்குகொள்ளும் பிரம்மாண்ட திருவிழாவாக நடைபெறப்போகிறது என்பதில் ஐயமில்லை.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article