சர்ஜிகல் தாக்குதல் நடந்ததது இப்போது முதல் முறை அல்ல, காங்கிரஸ் காலத்திலும் நடந்தது: மத்திய அரசு ஒப்புதல்

Must read

சமீபத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து முதன் முதலாக இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதாக பாஜக ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், ஏற்கெனவே இது போன்ற தாக்குதல்கள் காங்கிரஸ் காலத்திலும் நடந்திருக்கின்றன என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர்.. அதாவது மத்திய அரசே அறிவித்துள்ளது.

army

“மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிகாலத்திலும் பல முறை சர்ஜிகல் தாக்குதல்களை இந்திய ராணுவம் மேற்கொண்டது. ஆனால் இதுவரை அது குறித்த எந்த செய்தியும் மக்களுக்கோ மீடியாக்களுக்கோ வெளியிடப்பட்டதில்லை. உரி தாக்குதலுக்கு பின்னர் நடந்த சர்ஜிக்கல் தாக்குதல்தான் அரசால் விளம்பரப்படுத்தப்பட்டது” என்று நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்ஷங்கர் தெரிவித்தார்.
இதுவரை காங்கிரஸ் தலைமையிலான அரசு எந்த சர்ஜிகல் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை, தாங்கள் செய்ததுதான் முதல் சர்ஜிகல் தாக்குதல் என்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் கூற்று தவறு என்று இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இம்முறை சர்ஜிகல் தாக்குதல்கள் முடிந்ததும் அது குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் டைரக்டர் ஜெனரலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
.

More articles

Latest article