அரசியல்வாதியின் தம்பி வெறியாட்டம்: இளைஞர்களின் ஆசனவாயில் பெட்ரோலை ஏற்றி சித்திரவதை

Must read

உத்திரப்பிரதேச சமாஜ்வாடி கட்சியின் முக்கிய பிரமுகர் ஹாஜி ஏஹ்சான் குரேஷி, இவரது தம்பி ரிஸ்வான் குரேஷி இவர் தனது மொபைல் போனை திருடியதாக சந்தேகப்பட்டு 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளைஞர்களை கடுமையாக சித்திரவதை செய்துள்ளார்.

uptragedy

நாங்கள் செல்போனை திருடவில்லை என்று அவர்கள் மறுத்தும், சித்திரவதையின் உச்சக்கட்டமாக விலங்குகளுக்கு பயன்படுத்தும் ஊசியில் பெட்ரோலை ஏற்றி அந்த இளைஞர்களின் ஆசனவாய்க்குள் செலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் டெல்லியிலுள்ள குரு தேக்பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கடுமையான நோய்த்தொற்று காரணமாக அறுவைச் சிகிச்சை ஒத்தி வைக்கபட்டுள்ளது. இருவரின் ஆசனவாய்ப்பகுதியும் மிகக் கொடூரமாக சேதமடைந்துள்ளதால் ஆசனவாயை சரிசெய்ய இயலுமா அல்லது வேறு ஒரு மாற்று வழியை ஏற்படுத்தத வேண்டுமா என்பதை அறுவைச் சிகிச்சையின் போதுதான் முடிவு செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் அண்ணன் ஒரு ஆட்டோ ஓட்டுநராவார். மிகவும் ஏழ்மையில் இருக்கும் அவர்களது குடும்பத்தினர் நடந்த சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் குற்றவாளியான ரிஸ்வான் மற்றும் அவரது நண்பர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ரிஸ்வானின் சகோதரரும் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் பிரமுகருமான ஏஹ்சான் குரேஷி தனது தம்பி அந்த இரு இளைஞர்களையும் அடித்தது உண்மை, ஆனால் பெட்ரோலை ஆசனவாயில் செலுத்தியதாக சொல்வதெல்லாம் எதிர்க்கட்சியினரில் சூழ்ச்சி என்று கூறியுள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article