சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உள்ள பயன்படாத நகைகளை உருக்கி, தங்கக்கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்யும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு  திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்கட்டளை மிராசுதார் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் டெபாசிட் செய்து அதன்மூலம் வரும் வட்டிகளைக் கொண்டு கோவில் செலவுகளை நடத்த தமிழக அரசு முடிவெடுத்து, அரசாணை வெளியிட்டது.

இதற்கு இந்துக்களிடையே அதிருப்தி எழுந்தது. மேலும் அரசின் நடவடிகக்கை ரத்ரது செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த ஏ.வி கோபால கிருஷ்ணன், திருவள்ளூரைச் சோந்த எம்.சரவணன் ஆகியோா் தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கின் விசா ரணையின்போது தமிழ்நாடு கோவில்களில் 1977ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இல்லாத தங்க நகைகளை உருக்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருவதாகவும், இதன்மூலம் அறநிலையத்துறைக்கு ரூ.11 கோடி வருமானம் கிடைப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கோவிலின் நகைகளை உருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு  திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் கட்டளை மிராசுதார் கூட்டமைப்பு மற்றும் தீபம் மிராசுதார் நாட்டார்கள்,  ஆதரவு தெரிவித்து உள்ளது. தெப்பல் மிராசு நாட்டார்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகஅரசின் இந்து அறநிலையத்துறை வாயிலாக உண்டியல் மூலமாக கிடைத்த நகைகளை முறையாக கணக்கீடு செய்து அவற்றை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி பாதுகாக்கும் திட்டத்தை துவக்கி வைக்க ஆணையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணைசபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கு நன்றி  தெரிவித்துள்ளனர்.

கோயில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றும் நடவடிக்கையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்