தேனி: சாதாரண கூலிங்கிளாஸை நிர்வாணமாக காட்டும் ‘மாயக்கண்ணாடி’ என ஏமாற்றி ரூ.1லட்சம் அபேஸ் செய்த பலே கில்லாடி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதம் செய்து வருகின்றன.

தேனி மாவட்டம் தேனி வீரபாண்டி அருகே  உள்ள கிராமத்தை சேர்ந்த நண்பர்களான  அரசமுத்து, திவாகர், எளிய முறையில் ஏராளமாக பணம் சம்பாதிக்க எண்ணினர். இதுகுறித்து யோசித்த அவர்களுக்கு உதயமானது, நிர்வாண கண்ணாடி திட்டம். ஏற்கனவே கமல் படம் ஒன்றில், அவர் அணியும் கூலிங் கிளாஸ், நிர்வாணமாக காட்டுவதாக கூறப்பட்டுவந்தது. இதனால், அரசமுத்து, திவாகர் இருவரும், அதுபோல மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டனர்.

சாதாரண கூலிங் கிளாஸ் சிலவற்றை  வாங்கி வைத்துக்கொண்டு,தங்களிடம் மாயக் கண்ணாடி இருப்பதாகவும், அதனை கண்ணில் அணிந்தால் எதிரில் இருப்பவர்களை நிர்வாணமாக காட்டும் என்றும். இது எக்ஸ்ரே கண்ணாடி என்றும்  சில ஜொல்லு பார்ட்டிகளிடம் காட்டி விலைபேசி வந்துள்ளனர்.

இவர்களின் ஆசை வார்த்தையில் சிக்கினார் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ். இவரிடம், தங்களிடம் உள்ள மாயக்கண்ணாடி விலை உயர்ந்தது, இதை அணிந்துகொண்டால், பெண்கள் நிர்வாணமாகதெரிவார்கள், அப்படி இப்படி என பேசி, ஒரு கண்ணாடியின் விலை ரூ.1 லட்சம் என்று விலை பேசி உள்ளனர்.

அரசகுமாரின் வார்த்தையுல் மயங்கிய யுவராஜும் , அந்த கண்ணாடியை வாங்க சம்மதம் தெரிவித்ததுடன், பணத்துடன் வருகிறேன் என்று கூறி சென்றுவிட்டு, பின்னர்  ரூபாய் ஒரு லட்சம் பணத்துடன்  தனது ஜொல்லு பார்ட்டி நண்பர்களான சீனிவாசன், மதன், வரதராஜன் ஆகியோரையும் காரில்  அழைத்துக்கொண்டு, தேனி வந்து, அருகே உள்ள பெரியகுளம் நகராட்சிக்கு சுடுகாடு பகுதியில் ரூ.1 லட்சத்தை கொடுத்துவிட்டு கண்ணாடியை வாங்கி உள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட,  அரசமுத்து, திவாகர் ஆகியோர் உடனே அங்கிருந்து எஸ்கேப்பாகினர்.

ஆர்வமுடன் கண்ணாடியை போட்டுப்பார்த்த யுவராஜ், அதில் ஏதும் தெரியாதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த கண்ணாடியை தனது நண்பர்களுக்கு கொடுத்து போட்டு பார்க்கும்படி கூறியுள்ளார். கண்ணாடியை போட்டு பார்த்த ஜொல்லு பார்ட்டிகள், அதில் ஏதும் தெரிய வில்லையே, எல்லாம் கருப்பாகத்தானே தெரிகிறது என்று கூறியதுடன், அது சாதாரண 50 ரூபாய் கருப்பு  கண்ணாடியை என்பதை உணர்ந்தனர். தங்களை அரசமுத்து, திவாகர்  ஆகியோர் ஏமாற்றி விட்டார்கள் என அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனே, அவர்களை பிடிக்க முயற்சித்துள்ளனர்.  அதற்குள் பணத்துடன் திவாகர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். அரசமுத்து மட்டும் பிடிபட்டார்.

அவரை அடித்து உதைத்து,  பெரியகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த யுவராஜ் குழுவினர்,  தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர்,, தலைமறைவாக உள்ள திவாகரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.