சென்னை: சிபிஎஸ்இ பாடநூலில் உள்ள திருவள்ளுவர் படத்தை உடனே அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சிபிஎஸ்இ 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் தலையில் முடி இல்லாமல் குடுமி வைத்து காவி உடை தரித்து கோவில் குருக்கள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மத்திய அரசு உடனடியாக சிபிஎஸ்இ பாட நூலில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழக அரசு ஏற்பு அளித்த திருவள்ளுவரின் திருஉருவப் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று கூறி உள்ளார்.