திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான  இந்திய கம்யூனிஸ்ட்டு  கட்சி வேட்பாளராக  க. மாரிமுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஏழ்மையானவரான மாரிமுத்து, சாதாரண கூலித்தொழிலாளர்கள் வசிப்பதுபோல, ஒரு ஓலை குடிசையில் வசித்து வருகிறார். இவரது வாழ்க்கை தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

தமிழக சட்டமன்றதேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக்கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் திருத்துறை சட்டமன்ற தொகுதியும் ஒன்று. உழைப்பாளிகள், தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் 1962 முதல் இதுவரை, இடதுசாரிக் கட்சிகள் 11 முறை வெற்றி கண்டுள்ளன.  ஆனால், கடநத  2016 தேர்தலில் இத்தொகுதி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு வாய்க்கவில்லை. இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மாரிமுத்து வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராவார் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளா கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மாரிமுத்துவை  எதிர்த்து அதிமுக சார்பில்வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பவர்  களம் காண்கிறார்.

49வயதான கம்யூனிஸ்டு வேட்பாளர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கடுவுக்குடி என்ற கிராமத்தில் சாதாரண ஓலைக்குடிசையில் குடும்பத்தின ருடன் வசித்து வருகிறார். விவசாயியான  இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.  மனைவி பெயர் ஜெயசுதா ஒரு விவசாயக் கூலி. மகன், மகள் பள்ளியில் படிக்கின்றனர்.

சமூகப் போராளியான மாரிமுத்து வணிகவியலில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். குத்தகைக்கு நிலத்தை எடுத்து அதில், விளைபொருட்களை விளைவித்து எளிமையாக வாழ்ந்து வருகிறார்.   1994-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டு சேவையாற்றி வருகிறேன் என்று கூறும் மாரிமுத்து,   எளிமையான, தன்னிறைவான வாழ்வு வருவதாகவும்,  தன்னைப்போன்ற  சாமானிய மக்களுக்குக் குரல் கொடுப்பேன் என்றும்,  மூக, பொருளாதார, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய திருத்துறைப்பூண்டி தொகதியை  மேம்படுத்தும் வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கத் தொடர்ந்து முயல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எளிமையின் மறுஉருவமாக வாழ்ந்து வரும் மாரிமுத்து, தமிழக அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார். இவரைப்போல ஒவ்வொரு அரசியல்வாதியும் செயல்பட்டால், தமிழ்கம் உலகின் முதல்மாநிலமாக தலைநிமிரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மாரிமுத்துவின் மொத்த சொத்து விவரம்

75 சென்ட் நிலம் இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.1.75 லட்சம். கையில் இருக்கும் ரொக்கப் பண மதிப்பு ரூ.3000. வங்கிக் கணக்கில் ரூ.58,000 உள்ளது. அவரது மனைவி, மகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் உள்ளன.

மாரிமுத்துவின் சொத்துவிவரம் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

Affidavit-Marimithu-cpi

அதிமுக வேட்பாளர் சுரேஷ் சொத்துவிவரம்

இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார்  சொத்து மதிப்பு ஆவணங்களின்படி ரூ.20 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷின் சொத்துவிவரம் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

Affidavit-Sureshkumar-Thiruthoraipoodi