சென்னை: அரசுப் பேருந்துகளில் நீக்கப்பட்டிருந்த திருக்குறள் மீண்டும் அனைத்து பேருந்துகளிலும் இடம்பெறும், அதற்கான பணிகள் 10 நாட்களுக்கும் முடிவுறும் என என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பொதுமுடக்கத்தில்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தாடர்ந்து, இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. தனைத் தொடர்ந்து இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “தமிழ்நாடு முழுவதும் 702 குளிர்சாதன பேருந்துகள், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் 1,400 பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும் என்றவர், மகளிர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படுகிறது என்றார்.

கடந்த ஆட்சியின்போது, அரசு பேருந்துகளில் பராமரிக்காமல், அகற்றப்பட்டிருந்த திருக்குறள் மீண்டும் அனைத்துப் பேருந்துகளிலும்  இடம்பெறும். இன்னும் பத்து நாட்களுக்குள் அனை இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.