கஸ்தூரியின் மனம் கவர்ந்த ஹீரோக்கள் இவர்கள்தான்!

ஜினியுடன் அரசியல் ஆலோசனை நடத்திய கஸ்தூரியின் ”பொலிடிகல் ஹீரோ யார் தெரியுமா? மனம் கவர்ந்த ஹீரோ யார் தெரியுமா? அதிர்ச்சி அடையாம படிங்க..!

இப்போதெல்லாம் நடிகை கஸ்தூரி, அரசியலில் தீவிரமாக இருக்கிறார்.

அதாவது, அரசியல் பதிவுகளாக ட்விட்டரில் எழுதித் தள்ளுகிறார். ஏற்கெனவே ரஜினி குறித்து கிண்டல் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டார்.

இதையடுத்து அவரை தனது வீட்டுக்கு அழைத்து ரஜினி பேசினார். “ரஜினி தனது அரசியல் திட்டங்கள் குறித்து விளக்கினார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கஸ்தூரி. (இதுதான் அவர் ரஜினியை அதீதமாய் கிண்டல் செய்து பதிவிட்டதாக இருக்கும்!)

இப்போது இன்னொரு கிண்டல் பதிவை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

“எனது விருப்பமான ஹீரோ யார் என்று பலரும் கேட்கிறார்கள். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்… அவர்தான் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ” என்று பதிவிட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூவின் புகைப்படத்தையும், தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபரின்  படத்தையும் வெளியிட்டிருக்கிறார் கஸ்தூரி.

அதேபோல், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி, தமிழகத்தில் தற்போது உள்ள பிரச்னைகள் பற்றி கேட்காமல், ஊடகங்கள் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மட்டும் ஏன் பேசுகிறார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.


English Summary
These are the heroes of Actress Kasturi's favorites!