விருதுநகர்,

வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்தியதில் தொடர்புடைய போலீஸ் டிஎஸ்பி காதர் பாஷா தலைமறைவாகி உள்ளார்.

சுமார 9  கோடி ரூபாய் மதிப்பிலான 3 சிலைகளை தாய்லாந்து நாட்டுக்கு கடத்தப்பட்ட விவகாரத்தில், தேடப்பட்டு வந்த போலீஸ் டிஎஸ்பி காதர் பாஷ் தலைமறைவாகியுள்ளார்.

கடந்த 2008 ம் ஆண்டு விருதுநகர் அருகே உள்ள  ஆலடிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் விவசாய நிலத்தில் இருந்து 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சிலைகளை தனது சக போலீசார் உதவியுடன்  துப்பாக்கியை காட்டி மிரட்டி, விவசாயிடம் இருந்து கைப்பற்றி சென்றார்.

பின்னர் அந்த சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் 15 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டார்.

தீனதயாளன் சிலைகளை டில்லி புரோக்கர் மூலமாக விற்று தாய்லாந்து நாட்டிற்கு கடத்தி விட்டார்.  சிலையின் தற்போதைய மதிப்பு 9 கோடி ரூபாய்.

இதுகுறித்து, சமீபத்தில் கைது செய்யப்பட்ட பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த சிலை கடத்தல் விவகாரம் வெளியே தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்செது விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காதர் பாஷாவுடன் இணைந்து சிலையை கொள்ளையடித்த காவலர் சுப்புராஜ் (தற்போது கோயம்பேடு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இதையறிந்த தற்போது டிஎஸ்பியாக உள்ள  காதர்பாஷா தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.