கொல்கத்தா: இந்திய மிடில் ஆர்டரில் இடமிருந்தபோதும், தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி.

மேலும், கடந்த 2011ம் ஆண்டு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது முதல் சதத்தைப் பதிவுசெய்ததை இவர் நினைவுகூர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சென்ற போது மிடில் ஆர்டர் வீரர்கள் ரன்கள் அதிகம் எடுக்கவில்லை. மிடில் ஆர்டரில் எனவே நிறைய இடம் இருந்தது. என்னை அதில் எளிதில் உள்ளே நுழைத்திருக்க முடியும்.

கேப்டனாக இருந்த போது சவுரவ் கங்குலி அருமையான அணியைக் கட்டமைத்தார். 2011 உலகக்கோப்பையை நன்றாக ஆழமாக ஆராய்ந்தால் அதில் நன்றாக ஆடிய வீரர்களை கவனியுங்கள் அவர்கள் அனைவரும் கங்குலி கேப்டனாக இருந்த போது அணிக்குள் வந்தவர்கள்.

விரேந்திர சேவாக், யுவ்ராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், நெஹ்ரா, கம்பீர் என்று என்னால் பட்டியலிட முடியும். இந்த அனுபவ வீரர்களின் திறமையுடன், தோனியின் அபார தலைமைத்துவப் பண்பில் 2011 உலகக்கோப்பையை வென்றோம்” என்றார் அவர்.