டில்லி,

குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தனது ஆட்சியை தங்க வைத்துள்ளது. இதன் காரணமாக 6வது முறையாக மீண்டும் பதவி ஏற்க உள்ளது.

இந்நிலையில், குஜராத்தில் குஜராத் இடைத்தேர்தல் வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்ட தாகவும், எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே வாக்களிப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என  தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி உறுதிபடுத்தியுள்ளார்.

இன்றைய வாக்கு எண்ணிக்கையின்போது பிற்பகல் சுமார் 2 மணி அளவில் பாஜ 102 இடத்திலும், காங்கிரஸ் 82 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி கூறியதாவது,

“மின்னணு வாக்கு இயந்திரங்களின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஏற்கனவே இதுகுறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறோம். குஜராத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபாட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்மூலம், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்திருக்கிறோம் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள முடியும். அதனால், இந்த புகாரில் எந்தவித உண்மையும் இல்லை.”, என ஏ.கே.ஜோதி தெரிவித்தார்.