மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்ததால் எந்த பயனும் இல்லை – சி.ஏ.ஜி அறிக்கை

Must read

சென்னை:
த்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்ததால் எந்த பயனும் இல்லை என்று சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்களின் மொத்தக் கடன் 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இந்தக் கடன்களிலிருந்து மின்விநியோக நிறுவனங்களை விடுவித்து, அவற்றை சிறப்பாக இயங்கச் செய்யவே இந்தத் திட்டத்தை வடிவமைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி இந்த திட்டத்தில் தமிழ் நாடு இணைந்தது.

ஒன்றிய அரசின் உதய் திட்டத்துக்கு பிறகு டான்ஜெட்கோவின் கடன் 52% அதிகரித்துள்ளது. ரூ.81,312 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன், ஒன்றிய அரசின் ‘உதய்’ திட்டத்தில் இணைந்த பிறகு ரூ.1,23,895 கோடியாக அதிகரித்துள்ளது.

உதய் திட்டத்தின் மூலம் டான்ஜெட்கோவுக்கு குறிப்பிடத்தக்க பயன்கள் ஏதும் ஏற்படவில்லை என தணிக்கை அறிக்கை தெரிவித்தது.

More articles

Latest article