சென்னை: தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை அதனால் எனது பிள்ளைகள் ஆங்கில வழி கல்வி பயில்கின்றனர் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். இவரது குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லப்போவது யார் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை கடந்த 50ஆண்டுகளாக  மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும், சீமானின் நேரடி குற்றச்சாட்டுக்கு  பதில்கூறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு உள்பட பல இடங்களில் முன்னுரிமை வழங்குவதாக இரு திராவிட கட்சிகளும் வாக்குறுதி அளிப்பதும், பின்னர் ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும், சிறுபான்மை, பெரும்பான்மை  மக்களிடையே பிளவு ஏற்படுத்தி குளிர்காய்வதும் வாடிக்கையாகவே உள்ளது.

ஆட்சி காலத்தின்போது, தமிழ், தமிழர்கள் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, ஆட்சி நடத்தி வந்த மற்றும் வரும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் முக்கியத்துவம் இல்லை என்றே சீமான் குற்றம் சாட்டி உள்ளார். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ் வளர்க்கப்படவில்லையா, அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதிகள் என்ன ஆனது என்ற கேள்விகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

தமிழை வைத்து பிழைப்பை நடத்தி வரும்,  திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகிறதா? தமிழர்களுக்கு ஏராளமான  சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்படுவது அனைத்தும் கண்துடைப்பா,   அரசு பணிகளில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்படுவது உள்பட, பல்வேறு தமிழ் தொடர்லபான அறிவிப்புகள் போன்ற தமிழக  மக்களை ஏமாற்றும் மாய்மாலமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சரமாரி எழுப்பி வருகின்றனர்.

சீமானின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுக மற்றும் முந்தைய ஆட்சியாளர்களான அதிமுக சார்பில் முறையான விளக்கம் அளிக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழக அரசு, அரசு தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறிவிட்டு, சமீபத்தில், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளை சேர்த்ததுடன், அயல்நாட்டு மொழியான அரபுக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளது, தமிழக மக்களிடைய  சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சீமானின் நேரடி குற்றச்சாட்டு ஆட்சியாளர்கள் மீதுமேலும் சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.

முன்னதாக நேற்று (மார்ச் 27)  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், லோக்சபா தேர்தல் தொடர்பாக கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதுடன், கட்சியின் சின்னமான மைக் சின்னத்தையும் அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது,  பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி கேட்டோம் ஆனால், தேர்தல் ஆணையம் ஒதுக்க மறுத்து விட்டது, பின்னர்,  படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், கேட்டோம். ஆனால், அதையும் ஒதுக்க மறுத்து மைக் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  செய்தியாளர்கள், நாம் தமிழர் என்ற பெயரில் கட்சி வைத்திருக்கும் உங்கள் கட்சியின்   விருதுநகர் தொகுதி கௌசிக், வேட்பு மனுதாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல் திணறினாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சீமான்,  “என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை. வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று வியாக்கியானம் பேசினார்.

இந்த விஷயத்தில், தமிழ் தமிழ் என்று வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும். நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும் என கேள்வி எழுபிபியவர்,   “என் மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர்.  இதற்கு நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை” என்று குற்றம் சாட்டினார்.

சீமானின் குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் சீமானின் குற்றச்சாட்டுக்கு திராவிட ஆட்சியாளர்கள் பதில் கூறுவார்களா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.