டில்லி,
ந்தியாவின் பயன்படுத்தப்பட்டு வரும் சுமார் 32 லட்சம் டெபிட் கார்டுகள் திருட்டுபோய் உள்ளது. அதற்கான பின் நம்பரை உடனே மாற்றும்படி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.
தற்போதைய  நமது வாழ்க்கையில் டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகள் இன்றியமையாததாகி விட்டது. பள்ளி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உபயோகப்படுத்தி வருகிறோம்.
பணத்தை வீட்டில் வைப்பதால் ஏற்படும் திருட்டு பயத்தில் இருந்து தப்பிக்கவே பெரும்பாலானோர் ஏடிஎம், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள் மூலம் நாம் எடுக்கும் பின் எனப்படும் பாஸ்வார்டு நம்பரை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது. அந்த பின் எண் மூலம் மட்டும்கூட  நமது வங்கி கணக்கில்  உள்ள பணங்களை திருடி விட வாய்ப்பு உள்ளது.
அதுபோல் தற்போது இந்தியாவில் உள்ள   32 லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகள் தகவல்கள் திருடு போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் அதிகமாக எஸ்.பி.ஐ,  ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எப்.சி, எஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் வங்கிக வாடிக்கை யாளர்களின் ஏ.டி.எம். கார்டு தகவல்கள் திருடு போயுள்ளன.
ஏடிஎம் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஹிடாச்சியின் கம்ப்யூட்டர்களில் தான் முதலில் இந்த தகவல் திருட்டு மால்வேர் பரவியதாகவும், திருடப்பட்ட டெபிட் கார்டுகள் சீனாவில் பயன்படுத்தப்படுவ தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து தகவல் திருடப்பட்டிருக்கும் ஏடிஎம் கார்டுகளை முடக்கும் நடவடிக்கையை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.
உடனடியாக பின் எண்ணை மாற்றும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றன.ஸ்டேட் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6.25 ஏடிஎம் கார்டுகளை முடக்கியுள்ளது.
இதற்கு பதிலாக புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க உள்ளதாக கூறியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் பின் எண்ணை மாற்றுதல் உள்ளிட்ட சில அறிவுரைகளையும் கூறியுள்ளது.