டில்லி,
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா போராடி…… தோல்வியுற்றது.
முதல் நாள் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என, தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி. இன்னும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
முதலில் பேட்டை பிடித்த் நியூசிலாந்து அணிக்கு கப்டில், டாம் லதாம் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கனிர்.
ஆனால், இந்திய வீரர் உமேஷ் வீசிய 2வது பந்தில் கப்டில் (0) போல்டானார். இதனால் இந்திய ரசிகர்களிடையே உற்சாகம் களைகட்டியது. அடுத்து லதாம் (46), ராஸ் டெய்லர் (21) அடுத்தடுத்து அவுட்டாகினர்.
ஆனால், சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த வில்லியம்சன் இந்திய வீரர்களின் பந்துகளை விளாசி சதம் அடித்தார். இது அவரது ஒருநாள் போட்டியில் 15வது சதமாகும்.
இந்திய பந்து வீச்சாளர் மிஸ்ராவிடம், ஆண்டர்சன் (21) அவுட்டானார். அதையடுத்து வில்லியம்சன் 118 ரன்களில் அவுட்டானார்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பபும்ரா பந்துவீச்சில் ரான்கி (6) . தேவ்சிச் (7), சவுத்தீ (0), ஹென்றி(6) மூவரும் அடுத்தடுத்து வீழ்ந்த்னர்.
இருந்தாலும் நியூசிலாந்து அணி திறமையாக விளையாடி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது இந்தியாவுக்கு செக் வைத்தது. பவுல்ட் (5), சான்ட்னர் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
அடுத்து மட்டையை பிடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்ட ஜோடியான ரோகித் சர்மா, ரகானே ஆடத் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ரோகித் சர்மா 12 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
மிகவும் எதிர்பார்த்த் கோஹ்லி 9 ரன்னில் அவுட்டானார். இதனால் இந்திய ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது.
ரகானே (28), மணிஷ் பாண்டே (19) கேதர் ஜாதவ், 41 ரன்னும், தோனி 39 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அக்சர் படேல் (17), அமித் மிஸ்ரா (1), கப்டிலின் ஒரே ஓவரில் அவுட்டாகினர்.
கடைசி நேரத்தில் ஹருத்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ் இணைந்து போராடினர். பாண்ட்யா 36 ரன்னுக்கு அவுட்டாக, கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டன.
சவுத்தீ வீசிய இந்த ஓவரின் 3வது பந்தில் பும்ரா (0) போல்டாக, இந்திய அணி 49.3 ஓவரில், 236 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. உமேஷ் யாதவ் (18) அவுட்டாகாமல் இருந்தார்.
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் சவுத்தீயின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.