ஏப்ரல் 2ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு

Must read

சென்னை:
மிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) அறிவித்துள்ளது.மேலும்,அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,அரசு கல்லூரியில் 1,334 பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர திட்டத்தை (Annual Planner) டிஆர்பி வெளியிட்டுள்ளது.மேலும்,விபரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற இணைய தளத்தை பார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article