சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு – 173 வாகனங்கள் பறிமுதல்

Must read

சென்னை:
சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 173 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.7.87 லட்சம் அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் ரூ. 1.50 லட்சம் அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article