‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டமும் சேர்க்க முடிவு: மத்திய அமைச்சர் தகவல்

Must read

சென்னை,

ருத்துவ மாணவ சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நடைபெறும்  நீட் தேர்வில் மாநிலப் பாடத்திட்ட கேள்வித்தாளையும் சேர்த்து, வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்து வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு கூறி உள்ளது. கடந்த ஆண்டு இந்த நீட் தேர்வு காரணமாக 1155 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி, மத்திய அரசின் நீட்தேர்வில் வெற்றிபெறாததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தமிழகம் மட்டுமல்லாம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து,  மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு மாநில பாடத்திட்டத்தில்  பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில் மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் சேர்க்க மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை முடிவு செய்துள்ளது.

இதுவரை, மத்திய அரசு நடத்தி வரும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநில மொழி பாடத்திட்டத்திலும் கேள்வித்தாள் தயாரிக்க முன்வந்திருப்பது மாநில பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இதுகுறித்து சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மனித மேம்பாட்டு வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், இந்த ஆண்டில் இருந்து மாநிலப் பாடத் திட்டங்களையும் நீட் தேர்வில் சேர்ப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றும்,   இன்று நடைபெற உள்ள நீட் சிறப்பு கூட்டத்தில் மாநில பாடத் திட்டங்களையும் இணைத்து கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article