சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

பொருளாதாரத்தை சீரமைக்க சிறப்பு அந்தஸ்துடன்கூடிய பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்

இலங்கை அகதிகளுக்கு மேலும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்

சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். 11 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர பணிகள் மீண்டும் தொடங்க நடவடிக்கை

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்

விவசாய தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும்

கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணத்திற்கு பட்ஜெட்டில் அரை விழுக்காடு நிதி ஒதுக்கப்படும்

தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட ஒரு கோடி பேர் சாலைப்பணியாளர்களாக நியமிக்கப்படுவர்

10ம் வகுப்பு வரை படித்த சுமார் 50 லட்சம் பெண்கள் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்

தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை

உரிமம் முடிந்த பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்

சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை அனுப்பவர்களை தண்டிக்க தனிச்சட்டம்

கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள மத்திய, மாநில அரசு அலுவலக காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படும்

கேபிள் கட்டணம் முன்பு இருந்தது போல் குறைக்கப்படும்

பாலியல் தொழில், உடல் உறுப்புகளுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.