டெல்லி: சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றம்! மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிபிஎஃப் திட்டத்திற்கான வட்டியில் மாற்றமில்லை.

2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான பல்வேறு #சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் தொடங்கி 31 மார்ச் 2023 வரை திருத்தப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அரசு 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட டெர்ம் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.

புதிய வட்டி விகிதம் விவரம்:

இது தவிர மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), மாதாந்திர வருவாய் திட்டம் (MIS), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC) வட்டியில் மாற்றமில்லை

முதலீட்டாளர்களின் மிக விருப்பமான திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7.6 சதவிகித வட்டி 8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு இதுவரை 6.8 சதவிகித வட்டி 7.0 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதே மாதாந்திர வருவாய் திட்டத்திற்கு 6.7%ல் இருந்து, 7.1% ஆக அதிகறிக்கப்பட்டுள்ளது.

பிபிஎஃப் திட்டத்திற்கு இதுவரை 7.1 சதவிகித வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், எந்தவித மாற்றமுமின்றி அதே நிலை தொடர்கிறது.

சாதாரண சேமிப்பு கணக்குக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வட்டியான 4 சதவிகிதம் தொடர்கிறது. எந்தவித மாற்றமும் இல்லை

1வருட டெபாசிட்டுகளுக்கு இதுவரை 5.5 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 6.6 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2வருட டெபாசிட்டுகளுக்கு இதுவரை 5.7 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 6.8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

3வருட டெபாசிட்டுகளுக்கு இதுவரை 5.8 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 6.9 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

5வருட டெபாசிட்டுகளுக்கு இதுவரை 6.7 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 7,0 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

5வருட ரெக்யூரிங் டெபாசிட்டுகளுக்கு இதுவரை 5.8 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் எந்தவித மாற்றமும் இல்லை.