டெல்லி: 2021-22ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்யாதவர்கள்  இன்றே தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவே கடைசி வாய்ப்பு இனிமேல் அவகாசம் கிடையாது என எச்சரிக்கப்பட்டுள்து.

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு இன்றுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2021 – 22 -ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை ஜூலை 1-க்குள் தாக்கல் செய்ய வருமான வரி துறை வலியுறுத்தியது.  அதற்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 234F பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது. அதன் பிறகு அபராதத்துடன் தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்தது.

இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்காக கடைசி வாய்ப்பாக,  `திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் டிசம்பர் 31-ம் தேதி என அவகாசம் வழங்கப்பட்டது. மேலும்,  இந்தக் காலக்கெடுவுக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.  திருத்தப்பட்ட வரிக் கணக்கு தாக்கல் செய்ய அபராதம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் உடனே சென்று அபாராதத்துடன் செலுத்திவிடுங்கள்.

ஒருவர், புதிதாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் ஆண்டு மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதமும், ஆண்டு மொத்த வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் ரூ. 1,000 அபராதமும் கட்டினால்தான் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியும். அதன்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு தாக்கல் செய்ய முடியாது  என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.