சென்னை:
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் காய்கறி வாங்க வந்ததால், வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

சிறு வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களின் கூட்டமும் அதிகம் காணப்பட்டது.

எனவே விலை உயர்வு , காய்கறி பற்றாக்குறை ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக விடுமுறை இன்றி செயல்படுகிறது. அத்துடன் இன்று முகூர்த்த நாள் என்பதால் மலர் சந்தையிலும் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது. அதிகாலை 5 மணி முதலே மாலைகளை வாங்க பலரும் வந்தனர்.திருமண மாலைகள் 1,500 ரூபாயில் இருந்தும், ஆளுயர செண்டுப் பூ மாலைகள் 1,400 ரூபாயில் இருந்தும் விற்பனையானது .