சென்னை,

சென்னை மீனம்பாக்கம்  விமான நிலையத்தின் 2வது கட்ட விரிவாக்கப் பணி ரூ.2000 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட இருப்பதாக, இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தை உலக தரத்துக்கு மாற்றும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மக்கள் நெரிசலை குறைக்கும் பொருட்டு, பழைய உள்நாட்ட முனையத்தை இடித்து புதிய விரிவாக்க பணிகள் மேற்கொள்ள விமான நிலைய இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.2000 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இருக்கும் விமான இயக்குநரகம், பழைய விமான நிலையமான உள்நாட்டு முணையத்தை இடித்துவிட்டு தற்போது கார் பார்க்கிக் உள்ள பகுதி வரை புதிய கட்டிடங்கள் கட்ட முடிவு செய்துள்ளது.

இதன் முதல்கட்டமாக, விமான நிலையத்தினுள் இருந்து வாகனங்கள் எளிதாக வெளியேறும் வகையில், அதற்கான பாதை  உருவாக்கும் பணி வரும் ஜனவரியில் தொடங்கும் என்றும், அதையடுத்து பிப்ரவரியில் உள்நாட்டு முனையம் இடிக்கும் பணி தொடங்கும் என்று அறிவித்து உள்ளது.

3 மாதத்திற்குள் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளது.

இந்த 2வது கட்ட விரிவாக்கத்தின் பயனாக,  1000 உள்நாட்டு பயணிகள்,  4800 வெளிநாட்டு பயணிகள் பயணிக்கும் வந்துபோகும் வகையில் விமான நிலையம் உருவாக்கப்படும் என்றும் கூறி உள்ளது.