சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில்,  கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  73,728  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1169-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறையத் துவங்கியது.  ஜூன் மாதம் சென்னையில் தினசரி 2 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தினசரி 1200 முதல் 1700 பேருக்கு மட்டும் கண்டறியப்படுகிறது.
சென்னை முழுவதும் மார்ச் முதல் ஜூன் 6-ம் தேதி வரையிலான காலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர 25 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தொற்று பரவல் குறைந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,  சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், கட்டுப்பாட்டு மண்டலங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உளளது.