ஊட்டி:

செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில், சூர்யா, சத்யராஜ், விவேக் உட்பட எட்டு திரைப்பட நட்சத்திரங்களுக்கு நீலகிரி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சரத்குமார் – சூர்யா – சத்யராஜ்/ புவனேஸ்வரி

சில வருடங்களுக்கு முன், பிரபல நடிகையாக விளங்கியவர் “பூனைக்கண்” புவனேஸ்வரி. ஷங்கர் இயக்கிய “பாய்ஸ்”  உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு, ஒரு படத்தையும் தயாரித்துள்ளார்.  டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார்.

இவர் கடந்த 2009ம் ஆண்டு விபசார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது போலீசாரிடம் ஸ்ரீபிரியா, நளினி, சீதா உள்ளிட்டோர் விபசாரம் செய்வதாக புவனேஸ்வரி வாக்குமூலம் அளித்ததாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து திரைப்பட நட்டத்திரங்கள், கூடி, தினமலர் நாளிதழுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சரத்குமார்,விஜயகுமார், விவேக், அருண்விஜய், , சேரன், நடிகை ஸ்ரீப்ரியா ஆகியோர் ஒட்டுமொத்த செய்தியாளர்களையும் மிக ஆபாசமாக பேசினார்கள்.

இதையடுத்து இவர்கள் மீது, பழனி, சிவகங்கை, உடுமலைப்பேட்டை. நீலகிரி, உட்பட பல ஊர்களில் செய்தியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் வழக்கு தொடுத்தனர்.

இந்த வகையில் நீலகிரி நீதிமன்றத்தில்  தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 15ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது  நடிகர் சூர்யா உள்பட 8 பேர் ஆஜராகவில்லை இதையடுத்து அவர்கள் (சூர்யா, சத்யராஜ், விஜயகுமார், விவேக், அருண்விஜய், ஸ்ரீப்ரியா, சேரன்) நீலகிரி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.