ஸ்ரீஹரிகோட்டோ:

ந்தியாவின் போலார் செயற்கைகோள் மற்றும் 28சர்வதேச செயற்கைகோளுடன் ஏப்ரல் 1ந்தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதீஷ்தவான்  விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 4ந்தேதி  ‘கலாம் சாட்’ , ஸ்டுடன்ட் பேலோடு,  ‘மைக்ரோசாட்-ஆர்’,  ஆகிய  செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து, தற்போது போலார் சேட்டிலைட் ஏப்ரல் 1ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 01, 2019)  அன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதீஷ்தவான்  விண்வெளி ஏவு மையத்தில் இருந்து  காலை 9.30 மணி அளவில் இந்தியாவின் போலார் செயற்கை கோள்,  பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராயச்சி நிலையமான இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இந்தியாவின் போலார் செயற்கைகோளுடன் இணைத்து, பல்வேறு நாடுகளை சேர்ந்த 28 செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்படுவதாகவும் இஸ்ரோ அறிவித்து உள்ளது.

தற்போது, விண்கலம் ஏவுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், பிஎஸ்எல்வி-சி45  வாகனத்தை இன்று காலை 6 மணிக்கு,  வாகன அசெம்பிளி கட்டிடத்திலிருந்து  சத்தீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டிருப்பதாகவும், இஸ்ரோ தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.

தற்போது விண்கலம் ஏவுவதற்கான  ​​அனைத்து மின்சார சோதனைகளும் நடைபெறுகின்றன என்றும் தெரிவித்து உள்ளது.