வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் : வங்கிகள் மீது விஜய் மல்லையா தாக்கு

Must read

ண்டன்

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான மது ஆலையின் 74 லட்சம் பங்குகளை ரூ.1000 கோடிக்கு வங்கிகள் விற்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற கடன்களை திருப்பித் தராமல் லண்டனுக்கு ஓடி விட்டார்.   அவரை மீண்டும் இந்தியா அழைத்து வர லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது.   நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.   அதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.

நேற்று அமலாக்கத்துறையினர் யுனைடெட் ப்ரிவரீஸ் லிமிடெட் என்னும் மது உற்பத்தி நிறுவனத்தில் விஜய் மல்லையா வைத்திருந்த 74,04,932 பங்குகளை வங்கிகள் மூலமாக ரூ. 1008 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.   இது விஜய் மல்லையாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.

அவர் தனது டிவிட்டரில் பொதுத் துறை வங்கிகளை கடுமையாக தாக்கி உள்ளார்.   அவர், “பொதுத்துறை வங்கிகள் நான் கடன் வாங்கி விட்டு நாட்டை விட்டு ஓடிய திருடன் என பட்டம் கட்டுவதில் குறியாக உள்ளன.   ஏற்கனவே என்னுடைய ஏராளமான சொத்துக்களை வங்கிகள் பறித்துள்ளன.

இந்த சொத்துக்கள் அனைத்தும் நான்  கடன் திருப்பித்தர ஏற்பாடு செய்ய வைத்திருந்த சொத்துக்களாகும்.  வங்கிகளை பொறுத்த வரை வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்னும் கொள்கையில் உள்ளன.   என்னை அப்படித்தான் நடத்தி வருகின்றன” என பதிந்துள்ளார்.

More articles

Latest article