ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலாகிப்பு…

Must read

சென்னை: ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலாகித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக ஏராளமான ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.  முதல்வராக அவர் பதவி ஏற்றதும், கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து, அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

அதையடுத்து, முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் மே மாதம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.2 ஆயிரம் உள்டன் 14 மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில், அந்த திட்டம், ஜூன் 3ந்தேதி கருணாநிதி பிறந்த தினத்தன்று  தொடங்கப்பட்டது. அதையடுத்து, ஜூன் 15ந்தேதி முதல் ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. இதைப்பெற்றுக்கொண்ட பொதுமக்கள், ஏழை எளிய மக்கள், தமிழக அரசையும், முதல்வரையும் வானளாவ புகழ்ந்து வருகின்றனர்.

ரேசன் கடையில் ரூ.2ஆயிரம் உடன் மளிகை தொகுப்பை பெற்றுக்கொண்ட பல மூதாட்டிகள் தங்களது சந்தோஷத்தை தெரிவித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை பதிவிட்டு சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று மகிழ்ச்சிகரமாக டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,

, ‘இதைவிட வேறு மகிழ்ச்சி எங்களுக்கு இல்லை’ என்று  அந்த மூதாட்டிகளின் சிரிப்பு குறித்து சிலாகித்துள்ளார்.

More articles

Latest article