மிழ்நாட்டில் அனைத்து தலைவர்களையும் தேர்தல் ஜுரம் பாடாய் படுத்துகிறது.உதிரி கட்சி தலைவர்கள், லட்டர் பேட் கட்சி தலைவர்களும் இதற்கு விதி விலக்கல்ல.

கூட்டணி பேச்சு வார்த்தையை இறுதி செய்வதிலேயே அவர்கள் நேரம் கடத்திக்கொண்டி ருக்கிறார்கள் . விஜயகாந்தை வழிக்கு கொண்டு வர தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு தலைமை களும்  தூண்டில் போட்டும், வலை வீசியும் கொக்கு போல் காத்திருந்து. நாட்களை வீணாக்கி கொண்டிருக்க=

அ.ம.மு.க. கட்சியின் துணை பொதுச்செயலாளர்  டி.டி.வி.தினகரன்- தனது மக்கள் பயணத்தின் அஜெண்டாவை கையில் வைத்துக்கொண்டு -ஊர் ஊராய் சுற்றி பார்த்து மக்களின் நாடி பார்த்து வருகிறார்..

அ.தி.மு.க.,பா.ம.க.அணியின் அரணாக கருதப்படும் கடலூர் ஏரியாவில் நேற்று அவருக்கு திரண்ட கூட்டம்- மற்ற கட்சிகளை மிரள வைத்திருப்பது நிஜம்.

முக்குலத்தோர் பகுதியில் மட்டுமே அ.ம.மு.க.வுக்கு செல்வாக்கு என்று ஊடகங்கள் சொல்லி வந்த நிலையில்- வன்னியர் ஏரியாவில் தினகரனுக்கு திரண்ட கூட்டம் –அவரே எதிர்பாராதது.

இந்த தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் அ.தி.மு.க.கூட்டணிக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இல்லை. இது ஒட்டு மொத்தமாக –தி.மு.க.அணிக்கு சென்று விடாமல் தடுக்கும் நோக்கத்தில்தான் –எஸ்.டி.பி.ஐ.கட்சியுடன் தினகரன் உடன்பாடு கண்டுள்ளார்.

ஏற்கனவே கருணாஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நட்சத்திரங்கள் டி.டி.வி தினகரனுக்கு துணையாக இருக்க பா.ம.க.வில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித்தும் அங்கு ஐக்க்கியமாகி விட்டார்.தேர்தல் நெருக்கத்தில் மேலும் சிலர் கோடம்பாக்கத்தில் இருந்து வரக்கூடும்.

‘’அருமையான தருணங்கள் நமக்கு காத்துக்கிட்டிருக்கு ‘’என்று அண்மை நாட்களாக நிர்வாகிகளிடம் சொல்லி வருகிறார்- தினகரன்.

என்ன விஷயம்?

அ.தி.மு.க.தனது கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கியுள்ளதே தவிர எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை.குறைந்த பட்சம் ‘சிட்டிங்’ எம்.பி.க்கள் பாதி பேருக்கு சீட் கிடைக்கப்போவதில்லை.

அவர்கள் யார்? யார்? என ஹேஷ்யங்கள் தான் உலவுகிறதே தவிர இன்னும் உறுதி படுத்தப்படவில்லை.

அது உறுதியாகும் போகும் போது-அவர்கள் தினகரன் பக்கம் இருப்பார்கள் என்கிறார்கள்- அ.ம.மு.க.வட்டாரத்தில்.

‘’நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு அரசியல் அதிசயம் நடக்கும்.’’என்று அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சில தினங்களுக்கு முன்பு பூடகமாக கூறியது இதை வைத்துத்தான் என்கிறாரகள் –அரசியல் பார்வையாளர்கள்..

–பாப்பாங்குளம் பாரதி