அரசு மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்! திருநாவுக்கரசர்

Must read

சென்னை:

ட்டப்பேரவையை கூட்டி எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

தமிழகஅரசில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள்  நேற்று இணைந்தன. அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் துணைமுதல்வராகவும், மா.பா.பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

இரு அணிகள் இணைந்தாலும் ஒருசிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் அணியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கவர்னரை சந்தித்துள்ளனர்.

இரு அணிகள் இணைந்ததற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ள நிலையில்,

தமிழக சட்டப்பேரவையை கூட்டி அரசு மீண்டும் பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், அணிகள் இணைப்பு பாஜகவால் நடத்தப்பட்ட நாடகம் என்றும்   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

More articles

Latest article