தி.மு.க தலைவர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து நலம் விசாரிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கருணாநிதி, உடல்நலக் குறைவால் கடந்த எட்டு8 மாதங்களுக்கும் மேலாக  தனது கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.

சமீபத்தில் (ஜூன் மாதம்) கருணாநிதி பிறந்தநாள்,  சட்டப்பேரவையில் அவரது வைரவிழா, முரசொலி நாளிதழின் பவள விழா ஆகியவை தி.மு.க. சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டன.  . உடல்நலக் குறைவால்   இந்த விழாக்களில் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் வீட்டிலிருந்தபடியே  சிகிச்சைபெற்றுவரும்  கருணாநிதியை, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துவருகிறார்கள்.  ஆனால் இதுவரை வைகோ சென்று நலம் விசாரிக்கவில்லை.

தி.மு.க. – ம.தி.மு.க. இடையே மோதல் போக்கு நிலவி வந்தேத இதற்குக் காரணம். இந்த நிலையில் இரு கட்சிகளஉக்குமிடையே இணக்கமான போக்கு ஏற்பட ஆரம்பித்தது. எதிர்க்கட்சித் தலைவர் பணியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சரியாகச் செய்வதாக வைகோ தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் வைகோ சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆளும் அ.தி.மு.க.வில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. ஆட்சி கவிழும் சூழல் ஏற்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரலாம். இந்த சூழ்நிலையில் கருணாநிதியை வைகோ சந்தி்தால் தமிழக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்படக்கூடும்.