முதன்முதலாக புதுச்சேரியில் நிறுவப்பட்டது! ஜெயலலிதாவின் முழு உருவ சிலை

Must read

 
திருக்கனூர்:
ந்தியாவிலேயே முதன் முதலாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் முழு உருவ சிமென்ட் சிலை நிறுவப்பட்டுள்ளது.

உடல் நலம் சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5ந்தேதி சிகிச்சை பலன் இல்லாமல் மரணத்தை தழுவினார். மறைந்த ஜெயலலிதாவின் உருவ சிலை வைக்க அதிமுக வினர் முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாண்டிச்சேரியை சேர்ந்த நாசர் என்பவர் ஜெயலலிதாவுக்கு முழுஉருவ சிலை செய்து நிறுவி உள்ளார். இவர் அ.தி.மு.க. கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.
ஜெயலலிதா இறந்ததையடுத்து கடந்த 7-ந்தேதி ஜெயலலிதா வுக்கு முழு உருவச்சிலை அமைப்பதற்காக சேலம் ஆத்தூரை சேர்ந்த சிற்பி ஒருவரிடம் ஆர்டர் கொடுத்தார்.
சுமார் 1 லட்சம் செலவில் 7 அடி உயரத்தில் சிமென்டினால் செய்யப்பட்டு, அந்த சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்டது.
நேற்று புதுவை கொண்டு வரப்பட்ட அந்த சிலையானது, புதுச்சேரியில் உள்ள  திருக்கனூரில் நிறுவி உடனடியாக திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே இங்கு தான் முதன்முதலாக ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article