கருணாநிதியை நேரில் சந்தித்தேன்! ராகுல் காந்தி

Must read


சென்னை,
டல்நலமில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி தமிழகம் வந்தார்.
இன்று காலை 11.30 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்த ராகுல்காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து  உடல்நலம் பாதிக்கப்பட்டு மைலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலை வர் கருணாநிதியை சந்திக்க சென்றார்.
அங்கு அவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுக்கு சென்று, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,
கருணாநிதியை நேரில் சந்தித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் சார்பில் கருணாநிதியிடம் வாழ்த்து தெரிவித்தேன்.  இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் அவர், விரைவில் குணமடைந்து இல்லம் திரும்ப வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article