சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை ஏற்கனவே ரெய்டு நடத்திய நிலையில், தற்போது  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ரெய்டை தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அமைச்சர்கள் மீது டிஎம்கே பைல்ஸ்-1 என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியலில் முக்கிய நபர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், தற்போதைய அமைச்சர்கள் பலர் மீது, ஏற்கனவே  தொடரப்பட்ட பழைய சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த  நிலையில், ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நெஞ்சுவலி என கூறி தனியார் மருத்துவமனையில் ஓய்வுஎடுத்து வருகிறார்.

இந்த நிலையில்,  இன்று  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதுபோல விழுப்புரம் மற்றும் பொன்முடி உறவினர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகின்றது. விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல். இந்த ரெய்டை தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து, அவரது வீட்டை சுற்றி மத்திய போலீசார் காவலுக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

அமலாக்கத்துறை சோதனை ஏன்?

அமைச்சர் பொன்முடி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இரண்டு வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லை என கூறி பல ஆண்டுகளுக்கு பிறகு, அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலும் ஒரு வழக்கில் ஆதாரம் உள்ளது என கூறி நீதிமன்றம் விடுதலை செய்ய மறுத்து விட்டது.

இந்த நிலையில், கடந்த  2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, கனிகமவளத்துறை அமைச்சராக இருந்த  காலகட்டத்தில் . விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் உள்ள குவாரியில்  அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதாவது, அரசு உத்தரவின்படி, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது.  இந்த வழக்கில் சுமார் 11 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது  அமலாக்கத்துறை சோதனை  நடத்தி வருகிறது.

ஏற்கனவே அமைச்சர் பொன்முடி,  வெளிநாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு  செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவரது மகன்  கவுதம சிகாமணியில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை ஏற்கனவே  முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.