துணைவேந்தரை நியமனம் செய்வது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது… கே.பி.அன்பழகன்

Must read

சென்னை:
ல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமனம் செய்வது முழுவதும் ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் முடங்கி உள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில், பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்லைன் மூலம கல்விப்பணிகளை தொடங்கி உள்ளன.  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையும் அடுத்த மாதம் கல்லூரி இறுதியாண்டு தேர்வினை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையில், காலியாக  சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பாஜக ஆதரவாளர்களை நியமிக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கடுமையாக கண்டனம் தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தல்  அமைதி காத்து; மாநில அரசின் உரிமையை – அதிகாரத்தைப் பறிகொடுத்து; கலை மற்றும் அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியை அதிமுக அரசு அனுமதிக்கக்கூடாது” என்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படாமல் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி, தமிழக உயர்கல்வித்துறை  அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர்  துணைவேந்தரை நியமனம் செய்வது முழுவதும் ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது, இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை என்றவர்,
தகுதியானவர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர் என்றார்.

More articles

Latest article