சென்னை:
ருத்துவ இடஒதுக்கீடு குறித்து சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பு  தொடர்பாக  விவாதித்து புதிய சட்டத்தை இயற்றும் வகையில்,  அவசர கூட்டத்தை கூட்ட மத்தியஅரசை வலியுறுத்துங்கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. அதன்படி, மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம், மத்திய – மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பினையடுத்து, அதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கோரி சோனியா காந்தி  உள்பட அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,
மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில்  வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின்படி, முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் அவர்களின் ஆதரவைக் கோரினேன்:
a. இதுதொடர்பாக சட்டம் இயற்றும் வகையில், முன்னுரிமையுடன் ஒரு குழு கூட்டத்தை கூட்ட மத்தியஅரசை வலியுறுத்துங்கள்
b. மாநிலத்தில் ஓபிசி இட ஒதுக்கீடு சேர்க்கவும் அகில இந்திய கோட்டாவுக்கு மருத்துவ இடங்களை வழங்கியது
c. மாநில இடஒதுக்கீடு சட்டங்களை மேம்படுத்தவும் அவசர கூட்டத்தை கூட்ட வலியுறுத்துங்கள் என்று தெரிவித்து இருப்பதாக கூறி  உள்ளார்.

அதன்படி,
திருமதி. சோனியா காந்தி – தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்
திரு. சீத்தாராம் யெச்சூரி – பொதுச்செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
திரு. து.ராஜா – பொதுச்செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
திரு. தேவ கவுடா – தலைவர், மதச்சார்பற்ற ஜனதா தளம்
திரு. லாலு பிரசாத் யாதவ் – தலைவர், ராஷ்டிரிய ஜனதா தளம்
திரு. ஜெகன் மோகன் ரெட்டி – தலைவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
திரு. கே.சந்திரசேகர் ராவ் – தலைவர், தெலுங்கானா ராஷ்டிர சமிதி
திரு. உத்தவ் தாக்ரே – தலைவர், சிவ சேனா
செல்வி. மமதா பானர்ஜி – தலைவர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்
செல்வி. மாயாவதி – தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
திரு. அகிலேஷ் யாதவ் – தலைவர், சமாஜ்வாதி கட்சி
திரு. சரத் பவார், தலைவர், தேசியவாத காங்கிரஸ் கட்சி
திரு. உமர் அப்துல்லா, துணைத் தலைவர், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலினி பேசியதாக தெரிவித்துள்ளார்.