2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்க மருத்துவ நிபுணர்களுக்கு அறிவிப்பு…

Must read

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்க மருத்துவ நிபுணர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2021ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் ஆகியோர் இந்த பரிசை கூட்டாக பெறுகின்றனர்.

இவர்கள்,  நரம்பியல் மண்டலத்தின் உணர்திறன் தொடர்பான ஆய்வுக்காக இந்த பரிசு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம், குளிர்ச்சி, தொடு உணர்வு ஆகியவை தொடர்பான நரம்பியல் சென்சார் கருவியை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் நாள்பட்ட வியாதிகள், வலிகளுக்கான சிகிச்சை முறைகள் பெரும் முன்னேற்றத்தை அடையும் என நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

More articles

Latest article