சென்னை:
ட்ஜெட் குறித்து பாராட்டிய இந்திரா பார்த்தசாரதிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்க்கு பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, ‘நான் 1952 முதல் வாக்களித்து வருகிறேன். நான் பார்த்த மிகச் சிறந்த மாநில பட்ஜெட் இதுவாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதையறிந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த பாராட்டு தமிழ்நாடு அரசுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அமைந்துள்ளது என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தமிழின் தனிப்பெரும் படைப்பாளியாக விளங்கும் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இந்தப் பாராட்டைப் பெரிதும் மதிக்கிறேன். தமிழ்நாடு அரசுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இப்பாராட்டு அமைந்துள்ளது. வெளிப்படையாகப் பாராட்டிய அவரது பெருந்தன்மைக்கு நன்றி!’ என்று கூறியுள்ளார்.