தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி: தமிழ்நாட்டில் நடக்கும் அவமான தேர்தல்! பிரேமலதா

Must read

சென்னை,
ஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெறும் தேர்தல், தமிழ்நாட்டில் நடக்கும் அவமான தேர்தல் என்று சாடினார் பிரேமலதா.
பிரேமலதா வைகோ எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியர், தினம் ஒரு கருத்து சொல்வார் என்றும் கடுமையாக தாக்கி பேசினார் தேமுதிக பெண்கள் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பேட்டி அளித்த வைகோ, கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை தலைவராக ஏற்றது நான் செய்த பெரும் தவறு என்று கூறியிருந்தார். இது மக்கள் நலக்கூட்டணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
premalath
இன்று, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
தமிழ்நாட்டில் நடக்க உள்ள 3 இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. தே.மு.தி.க. பிரசாரத்தை இன்று முதல் தொடங்குகிறோம் என்றார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் பிரசாரத்துக்கு வருகிறார். அவர் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
நடக்க இருக்கும் 3 தொகுதி தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல்.
மற்ற 2 தொகுதி களில் நடப்பது மறு தேர்தல்,  இது தமிழ்நாட்டில் நடக்கும் அவமான தேர்தல் என்றார். ஏனென்றால் பணபட்டு வாடா பெரும் அளவில் நடந்ததினால் 2 தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் நல்ல முறையில் தேர்தலை நடத்தினால் தே.மு.தி.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.
இந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆதரவு இல்லை என்று கூறி இருக்கிறார்.
அவர் உணர்ச்சி வசப்படக்கூடிய குணம் உள்ளவர். தினமும் ஒரு கருத்து சொல்வார். அவர் சொல்கிற கருத்துக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று தேடி வந்தவரும் அவரே. இப்போது விமர்சனங்களை வைப்பதும் அவரே. இதற்கு அவரே பதில் சொல்வார்.
3 தொகுதிகளில் தே.மு.தி.க. ஜெயித்தால் அந்தந்த தொகுதிகளில் எது முக்கியமோ, என்ன தேவையோ அது செய்து தருவோம் என்று கூறி பிரசாரம் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article