சமையலறை இல்லை, கேஸ் ஸ்டவ் இல்லை, நவீன வசதிகள் இல்லை… வீட்டுக்கு வெளியே ஒரு விறகடுப்பை வைத்து, 300 முட்டைகளை இலகுவாக கையாண்டு சூப்பர் முட்டைக் குழம்பை சமைத்து அசத்துகிறார் இந்த தமிழகத்து பெரியவர். இவரது மகன் நடத்தும் “வில்லேஜ் ஃபுட் பேக்டரி” என்ற யூடியூப் சேனலைப் போய் பார்த்தால் அந்த சேனல் முழுவதும் ஓடுவது, பறப்பது, நடப்பது, நீந்துவது என ஒன்றையும் விடாமல் எல்லாவற்றையும் எளிதாகவும் அற்புதமாகவும் அவர் சமைக்கும் வீடியோக்களால் நிறைந்திருக்கின்றன. சொன்னால் நம்ப மாட்டீர்கள்! ஒவ்வொரு வீடியோவுக்கும் லட்சக்கணக்கான பார்வையாளார்கள், ஆயிரக்கணக்கான லைக்குகள்!

கீழ்கண்ட வீடியோவில் பாருங்கள், குடும்பமாக சேர்ந்து சமைத்து, அழகான கிராமத்து தமிழ் பேசி தந்தையும் மகனும் ஒரே இலையில் மகிச்சியாக சாப்பிடுகிறார்கள்.

[embedyt] http://www.youtube.com/watch?v=3qRX-y706Ms[/embedyt]

அந்தப் பெரியவர் எந்த நவீன உபகரணங்களும் இல்லாமல் 300 முட்டைகளை அற்புதமாககையாண்டு எளிதாக சமைத்து பார்ப்பவர்களை மலைக்க வைக்கிறார்.
இவரது திறமையைக் கண்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் இவரைப்பற்றி ஒரு செய்தியே வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறது