விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் இன்று வெளியிட்டு வருகிறது.

ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, தவிர இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான் மற்றும் இளம் நடிகர் தாமஸ் மாத்யூ என்று பலரும் இதில் நடிக்கிறார்கள்.

2019ம் ஆண்டு வெளியான கும்பளாங்கி நைட்ஸ் என்ற மலையாள படத்தில் பிராங்கி நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான தாமஸ் மாத்யூ மலையாள திரையுலகில் பிரபலமானவர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.