வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயின் 68வது படமான இந்த படம் செப்டம்பர் 5 ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தளபதி69-வது படத்திற்குப் பிறகு அரசியலில் முழுக்கவனம் செலுத்த இருக்கும் நடிகர் விஜய் அதன் பிறகு நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதனால் அவரது கடைசி இரண்டு படங்களின் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது.