நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தின் ஷூட்டிங் கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது.

தளபதி 65 படத்தில் நடிக்க பூஜாவுக்கு ரூ. 3 கோடி சம்பளமாம். விஜய், பூஜா ஹெக்டே படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தளபதி 65 ரிலீஸ் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

இரண்டாம்கட்ட படப்பிடிப்பை மே மாதம் சென்னையில் நடத்த முடிவு செய்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.