தமன்னா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் ‘நவம்பர் ஸ்டோரி’. ஏழு எபிசோட்களைக் கொண்ட இத்தொடரை ராம் சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.

இதில் தமன்னாவுடன் பசுபதி, ஜி.எம்.குமார், அருள்தாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரில் தமன்னா, அனுராதா என்னும் ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘நவம்பர் ஸ்டோரி’ தொடர் வரும் மே 20ஆம் தேதி அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.